×

பாலக்காடு அருகே சுருளி கொம்பன் யானை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

பாலக்காடு: பாலக்காடு அடுத்த கஞ்சிக்கோடு கிராமத்திற்குள் சுருளி கொம்பன் என்கிற காட்டு யானை நடமாடுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் வாளையார், கஞ்சிக்கோடு, மலம்புழா, கொட்டேக்காடு, சுள்ளிமடை, கிணறுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாவே சுருளி கொம்பன் என்கிற காட்டு யானை நடமாடி வருகிறது. ஊருக்குள் நுழையும் காட்டு யானை தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது. மேலும் கஞ்சிக்கோடு- மலம்புழா சாலையில் சுருளி கொம்பன் யானை வாகனங்களை அடிக்கடி வழிமறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

இதனால், வனத்துறையினர் வாகன ஓட்டிகளை கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஊருக்கும் நடமாடும் சுருளி கொம்பன் யானையை வனத்துறையினர் பாட்டாசுகள் வெடித்து விரட்டினாலும், மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால் கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர். சுருளி கொம்பனை மயக்கஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாலக்காடு அருகே சுருளி கொம்பன் யானை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Curly ,Ganjhikode ,Palakkadu ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...